[Tamil] - மதுரைவீரசுவாமிகதை

[Tamil] - மதுரைவீரசுவாமிகதை

Narrated by:
Ramani
A free trial credit cannot be used on this title

Unabridged Audiobook

Ratings
Book
Narrator
Release Date
September 2023
Duration
2 hours 20 minutes
Summary
மதுரை வீரன் தமிழ்நாட்டவர் காவல் தெய்வங்களில் ஒருவர். மதுரை வீரன் சிலை வெள்ளையம்மாள், பொம்மி என இருவரும் இருபுறமிருக்க மதுரைவீரன் சிலை நடுவே நிற்பது போல் அமைக்கப்படுகிறது. மதுரை வீரன் வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு. தொட்டியச் சக்கிலியர் இனத்தை சேர்ந்த மாதியச் சின்னான், செல்லி தம்பதிகளின் மகனாக கி.பி.1608 - ல் பிறந்தார். திருச்சி பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்த ராஜகம்பளம் இனத்தை சேர்ந்த பொம்மையா நாயக்கர் என்பவரின் மகள் பொம்மி வயதுக்கு வருகிறாள் . ராஜகம்பளம் சமுதாயத்தின் வழக்கப்படி வயதுக்கு வந்த அந்த பெண்ணை காட்டில் குடில் அமைத்து ஒரு மாதம் காவல் செய்ய வேண்டும்.காவல் பொறுப்பை தந்தையின் உடல்நல குறைவால் மதுரைவீரன் ஏற்றார். பொம்மி இவரின் வீரம் மற்றும் அழகில் மயங்க இருவரும் காதல் கொண்டு ஊரை விட்டு வெளியேறுகின்றனர். இது பொம்மையா நாயக்கருக்கு தெரிந்தவுடன் மிகுந்த கோபத்தில் இருந்தார். அவருடைய மகன் பெரும்படையுடன் மதுரைவீரனை எதிர்க்கின்றார். அவர் அருந்ததியர்கள் படையுடன் கடுமையாக போரிட்டு வெற்றிகொள்கின்றார். திருமலை நாயக்கர் கள்வர்களின் அட்டூழியங்களை அடக்க மதுரைவீரனை பயன்படுத்திக்கொண்டார், மதுரைவீரனின் அருந்ததியர் படை மதுரை சுற்றுவட்டார பகுதியில் இருந்த கள்வர்கள் கொட்டத்தை ஒடுக்கி மதுரை மக்களை காத்தது. புதுக்கோட்டை மன்னர் தொண்டைமான் கேட்டு கொண்டதற்கிணங்க திருச்சி, புதுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் அருந்ததியர்கள் படையுடன் சென்று போரிட்டு கள்வர்கள் கூட்டத்தை ஒடுக்கி மக்களை பாதுகாத்தார். இவரின் வீரத்தைக் கண்ட கள்ளர் இன பெண் வெள்ளையம்மாள் மதுரை வீரனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். சூதுசெய்து மதுரைமீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் மதுரை வீரனை பிடித்து மாறுகால், மாறுகை என்னும் முறையில் கொலை செய்து விடுகின்றனர். மீனாட்சியம்மன் நேரடியாக தரிசனம் வழங்கி மதுரையை அழிக்க முற்பட்டாள். மதுரைவீரன் கேட்டுக்கொண்டதற்கு மனமிரங்கி அவரை ஆட்கொண்டு கிழக்கு கோபுரவாசலில் கம்பத்தடி வீரனாக வைத்துக்கொண்டார். மதுரை வீரன் கதை பல வடிவங்களில் நிலவி வருகிறது. புகழேந்திப் புலவர் பாடிய மதுரை வீரசுவாமி கதை நாட்டுப்புறக் கதைப் பாடல் வடிவில் அமைந்திருக்கிறது. இப்பாடலை ரமணியின் நேர்த்தியான வாசிப்பில் கேட்கலாம்.
Browse By Category
1 book added to cart
Subtotal
$5.00
View Cart