[Tamil] - நளவெண்பா

[Tamil] - நளவெண்பா

Narrated by:
Ramani
A free trial credit cannot be used on this title

Unabridged Audiobook

Ratings
Book
Narrator
Release Date
October 2023
Duration
1 hour 50 minutes
Summary
மகாபாரதத்தின் துணைக் கதைகளுள் ஒன்றான, நிடத நாட்டை ஆண்ட நளன் என்னும் மன்னனின் கதையைத் தமிழில் கூற எழுந்ததே நளவெண்பா ஆகும். இதனை எழுதியவர் 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவர் என்பவராவார். இதன் பெயர் சுட்டுவது போல், இந்நூல் வெண்பாக்களால் அமைந்தது.

மகாபாரதத்திலே கௌரவர்களுடன் சூதாடித் தோற்ற பாண்டவர்கள் தங்கள் நாட்டை விட்டுக் காட்டிலே வாழ்கின்றனர். அவர்களைப் பிரகதசுவர் என்னும் முனிவர் சென்று காண்கிறார். தமக்கு நிகழ்ந்தவற்றை பற்றிக் கவலையுடன் இருந்த தருமரைத் தேற்றுமுகமாக முனிவர் அவருக்குக் கூறியதாக இந்நூல் அமைந்துள்ளது. நிடத நாட்டின் மன்னன் நளன். அவனது மனைவி தமயந்தி நளனை விரும்பி சுயம்வரத்தில் அவனைத் தேர்ந்தெடுத்து மணந்ததை இந்திரன் மூலம் கேட்டு, தமயந்தியின் சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்துகொண்டிருந்த கலிபுருஷன் நளனைப் பழிவாங்க முடிவு செய்வதும், அதன் பின்னர் நடக்கும் சூதாட்டத்தில் நளன் நாடிழந்து, மனைவி குழந்தைகளைப் பிரிந்து சிரமப்பட்டுப் பின்னர் இழந்த அனைத்தையும் திரும்பப்பெறுவதைக் கூறும் கதை. சுயம்வர காண்டம், கலிதொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் என மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலில், 427 வெண்பாக்கள் உள்ளன. இவற்றுள் 7 வெண்பாக்கள், பாயிரம், நூல்வரலாறு என்பனவாகும். சுயம்வர காண்டத்தில் 171 வெண்பாக்களும், கலிதொடர் காண்டத்தில் 155 வெண்பாக்களும், கலிநீங்கு காண்டத்தில் 94 வெண்பாக்களும் உள்ளன.

வெண்பாவுக்கெனத் தொல்காப்பியம் குறித்துச் செல்லும் செப்பலோசையில் ரமணியின் நேர்த்தியான வாசிப்பில் நளவெண்பா ஒலி நூலாக்கம் பெறுகிறது.
Browse By Category
1 book added to cart
Subtotal
$4.00
View Cart