[Tamil] - Avvaiyar Verses

[Tamil] - Avvaiyar Verses

Written by:
Avvaiyar
Narrated by:
Ramani
A free trial credit cannot be used on this title

Unabridged Audiobook

Ratings
Book
Narrator
Release Date
March 2022
Duration
2 hours 40 minutes
Summary
அவ்வையார் பாடிய பாடல்கள் சங்க இலக்கியங்களில் குறுந்தொகையில் 15, நற்றிணையில் 7, அகநானூற்றில் 4,புறநானூற்றில் 33 என்ற எண்ணிக்கையில்  அமைந்துள்ளன. தம்மை அன்புடன் ஏற்றுக்கொண்டு, நெடுங்காலம் தம் அரசவையிலேயே ஔவையாரை அமர்த்தி அவர் புலமையை மதித்தவன் அதியமான் நெடுமான் அஞ்சி ஆவான். ஔவையார் தன் காதலைப் புரிந்து கொள்ளாமல் உறங்குகின்ற ஊரைக் கண்டு மிகுந்த கோபம் கொண்டு அந்த ஊர்மக்களைத் தாக்கி வீழ்த்தித் தன்னிலையைப் புலப்படுத்த முயல்கிறாள்.

முட்டுவேன்கொல்! தாக்குவேன் கொல்!

ஓரேன் யானும்; ஓர் பெற்றி மேலிட்டு

ஆஅ! ஒல் எனக் கூவுவேன் கொல்!

அலமரல் அசைவளி அலைப்ப, என்

உயவுநோய் அறியாது, துஞ்சும் ஊர்க்கே!

ஆத்திசூடி என்பது 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து மனதில் நிறுத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி.

தமிழ் கற்கும் போது தமிழின் உயிரெழுத்துகளைச் சொல்லித் தருகின்ற பொருட்டு ஔவையின் ஆத்திசூடியைக் கொண்டு கற்பிப்பதை ஆசிரியர்கள் கடைப்பிடித்து வருகின்றார்கள்.

கொன்றை வேந்தன் ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல். கொன்றை மரத்தின் மலரை விரும்பி அணியும் கடவுள் சிவன். அவரது புதல்வர்களுள் ஒருவராகிய முருகனைப் போற்றி இந்நூல் பாடப்பட்டுள்ளது. இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல்:

“கொன்றை வேந்தன் செல்வன் அடிஇணை

என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே”

நல்வழி: மக்கள் தம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நல்வழிகளை நேரிசை வெண்பாவில் இந்நூல் எடுத்துரைப்பதால் இப்பெயர் ஏற்பட்டது. இந்நூலின் க
1 book added to cart
Subtotal
$6.00
View Cart